முல்லைத்தீவில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் உயிரிழப்பு

 முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலே இன்று(02) காலை கரைவலைத் தொழிலில் ஈடுபட்டிருந்த  நபர் ஒருவர் நீரில் மூழ்கி  உயிரிழந்துள்ளார் 

கரைவலை தொழிலில் ஈடுபட்டிருந்த குறித்த நபர் திடீரென கடலுக்குள்  மூழ்கி உயிரிழந்துள்ளார் 

உயிரிழந்த நபர் அவிசாவளை  பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான  சிவனு சிவகுமார் என்பவராவார்.

குறித்த நபரின் சடலத்தை  இன்று  மாலை வருகை தந்து பார்வையிட்ட முல்லைத்தீவு நீதவான்  நீதிமன்ற நீதிபதி S.H .Mahroos  உடல் கூற்று பரிசோதனையின் பின்னர் உறவுகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார் 

தற்போது சடலம்  முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply