பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூவர் நேற்று உண்ணாவிரத்தை ஆரம்பித்திருந்தனர்.
2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட் ட இவர்கள் இன்று வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ள நிலையில் வைத்திலிங்கம் நிர்மலதாஸ்,இரத்தினசிங்கம் கமலகரன் ஆகிய இருவரும் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
இதேவேளை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உறவுகள் இன்று காலை சிறைச்சாலைக்கு சென்று அவர்களை பார்வையிட்டுள்ளனர்.
அத்துடன் கைதிகளின் உறவுகள் நேற்று வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக.நேற்று உண்ணாவிரத விரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ,தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடரவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
மேலும் குறித்த சிறைக் கைதிகளின் உறவுகளை நாளை மாகாண ஆளுநர் மாலை 4 மணிக்கு சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






