மன்னார் – எழுத்தூர் பகுதியில் சட்ட விரோதமாக பிடிக்கப்பட்டு குளியல் அறையில் ஒழித்து வைக்கப்பட்டிருந்த ஐந்து கடலாமைகள் நேற்றிரவு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது
மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் துல்ஷன் நாகவத்தயின் பணிப்புரையின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானக்கவின் கண்கானிப்பில் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பாதிகாரி குமார பல்லேவல தலைமையிலான குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் எழுத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே மேற்படி ஆமைகள் மீட்கப்பட்டுள்ளது
குறித்த ஆமைகள் அரிய வகை பேராமை இனத்தை சேர்ந்தவை என்பதுடன் ஒவ்வொரு ஆமையும் சுமார் 100 கிலோ எடை உடையவையாக காணப்படுகின்றது
குறித்த கடலாமைகள் பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு இன்று மாலைக்குள் கடலில் மீள் விடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.






