கல்லடி பகுதியிலிருந்து முள்ளிபுரம் பகுதிக்கு அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக தேக்கை மரப் பலகைளை ஏற்றிச் சென்ற லொறியை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
புத்தளம் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய இன்று காலை புத்தளம் நகரில் வைத்து சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
கல்லடி பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 247 பலகைகள், பலகைகளை ஏற்றிச் சென்ற லொறி ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் பலகைகள், மற்றும் லொறி ஆகியவற்றை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.






