ஆரையம்பதியில் விபத்து: ஒருவர் பலி

கொழும்பு, பெப் 24: மட்டக்களப்பு ஆரையம்பதியில் இடம்பெற்ற விபத்தில் கொக்கட்டிச்சோலை கச்சக்கொடி சுவாமிமலை பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய முத்துபண்டா யோகராசா என்பவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், மோட்டார் சைக்கிளொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக பேருந்து சாரதியை கைது செய்துள்ளதாக காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply