யாழில் கடும் விமர்சனத்திற்கு உள்ளான தியாகியின் செயல்!

யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவரின் மோசமான செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் கடும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு கோடிஸ்வரராக மக்கள் மத்தியில் வெளிப்படுத்திய நிலையில், தன்னை தியாகி என அவரே அழைத்து வருகின்றார்.

இந்நிலையில் இலங்கை மத்திய வங்கியின் சட்டங்களுக்கு எதிராக தாள் நாணயத்தை காலால் மிதித்து சேதப்படுத்தும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

மக்களுக்கு கோடிக்கணக்கான பணத்தை தானமாக வழங்குவதாக தன்னை பிரபலப்படுத்தி வரும் தியாகி குறித்து அண்மைக்காலமாக பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கோடிக்கணக்கான பணத்தை தானமாக வழங்க அவருக்கு பணம் எங்கிருந்து வருகின்றது. இதன் பின்னணியில் யார் உள்ளார் என்பது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

இலங்கையில்   தமிழர்கள் மத்தியில் தன்மானம் மேலோங்கியுள்ள நிலையில், இலவசம் என்ற பேரில் மக்களை சோம்பேறிகளாக மாற்றும் சதித்திட்டத்தின் பின்னணியாக இருக்கலாம் என பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் பெருந்தொகை பணத்தை தனது காலில் போட்டு மிதித்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை   மத்திய வங்கியின் சட்டங்களுக்கு அமைய நாணயத்தை சேதப்படுத்துவது பாரிய குற்றமாகும்.

இதனை சட்ட ரீதியாக அணுகினால் தியாகி என அடையாளப்படுத்தப்படும் கோடிஸ்வரர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

The post யாழில் கடும் விமர்சனத்திற்கு உள்ளான தியாகியின் செயல்! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *