வடமராட்சி – நெல்லியடி மாலிசந்தி மத்திய மகளிர் பாடசாலை முன்பாக இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்தார்.
கோயில் சந்தையை சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் ஒருவன் சற்றுமுன் உயிரிழந்தார்.
மாலிசந்தி நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், வதிரி சந்தி நோக்கி சென்றுகொண்டிருந்த பொறி ரக வாகனமும் மோதிய நிலையில் விபத்துக்குள்ளான இளைஞனை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்தார்.
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.






