யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக வீசிய அதிக காற்று காரணமாக இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் ஜே 399 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வீடொன்றும், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் ஜே 227 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வீடொன்றுமே இவ்வாறு சேதமடைந்துள்ளன.
இதன் காரணமாக இரண்டு வீடுகளைச் சேர்ந்த எழு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.