அநுராதபுரம் – கெக்கிராவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 35 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குளவி கொட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
இச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
பாடசாலைக்கு அருகில் உள்ள குளவி கூடொன்று கலைந்ததால் மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர்.
5 வயது முதல் 10 வயது வரையிலான சிறுவர்கள் குழுவொன்றே இந்தக் குளவி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
குளவி தாக்குதலின் போது, மாணவர்களைக் காப்பாற்ற முயற்சித்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சிலரும் குளவி தாக்குதலுக்கு முகம்கொடுத்துள்ளனர்.
இதேவேளை குளவி தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சிகிச்சைக்காக கெக்கிராவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒரு மாணவர் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.