கோமாளிக் கூத்து ஆடும் சஜித்! ரணிலை ஆதரிப்பதே ஒரே வழி!! – ஐ.தே.க. தெரிவிப்பு…!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் கால பிரசாரக் கருத்துக்கள் கவலையளிக்கின்றன என்று தெரிவித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தருமான ஆஷு மாரசிங்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோமாளிக் கூத்து ஆடும் சஜித்துக்கு ஆதரவளித்து பயனில்லை என்றும், ரணிலுக்கு ஆதரவளிப்பதே சிறந்தது என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த தேர்தல் காலங்களின்போது எவ்வாறு பிரசார நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என சஜித் பிரேமதாஸ  எங்களிடம் கேட்டுள்ளார். ஏதேனும் பிரதேசம் ஒன்றுக்குச் செல்லும்போது அவர் உதவி கோருவார்.

நானும் அதற்கான அறிவுரைகளை வழங்கியுள்ளேன். இதற்கான வட்ஸ்அப் ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அவர் இல்லையென மறுக்க முடியாது. நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளோம்.

இவ்வாறிருக்க அவரது அண்மைய யாழ்ப்பாணம் விஜயத்தின்போது அவருடைய கருத்துக்கள் உண்மையாகவே கவலையளிக்கின்றன.

அவர் அவசர அவசரமாக ஜனாதிபதியாக நினைத்தால் கோட்டாபாய வெளியேறிய காலத்துக்கு முன்னதாகவே வெளியேற நேரிடும்.

எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோமாளிக் கூத்து ஆடும் சஜித்துக்கு ஆதரவளித்துப் பயனில்லை. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குவுக்கு ஆதரவளிப்பதே சிறந்தது.” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *