மயக்க மருந்து பற்றாக்குறையால் இரத்து செய்யப்பட்ட சத்திரசிகிச்சைகள்!

850 அத்தியாவசிய மருந்துகளில் சில மருந்துகளைத் தவிர அனைத்து உயிர்காக்கும் மருந்துகளும் தட்டுப்பாடின்றி பராமரிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

எல்பிட்டியவில் நேற்று இடம்பெற்ற நடமாடும் சுகாதார வைத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே சுகாதார அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தேசிய கொள்வனவு முறைமைக்கு அமைவாக உயர்தர மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டு தட்டுப்பாடின்றி மக்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் Isoflurane மயக்க மருந்து பற்றாக்குறையினால் சத்திரசிகிச்சைகளை இரத்து செய்ய நேரிட்டதாக அறிவிக்கப்பட்டது.

குறித்த மயக்க மருந்து கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவற்ற பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் வைத்திய விநியோக பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.

மருந்துகளை விடுவிப்பதற்கான ஆவணங்களை இறக்குமதியாளர்கள் சமர்ப்பிக்காமையால், மருந்துகளை பகிர்ந்தளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *