போரிடச் சென்ற இலங்கையர்களின் விபரங்கள்! கடும் மௌனம் காக்கும் உக்ரைன்

 

ரஷ்ய  – உக்ரைன்  போரில், உக்ரைனுக்காக போரிடும் இலங்கையர்கள் பற்றிய விபரங்களை சமர்ப்பிக்குமாறு இலங்கை பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும் உக்ரைன் இதுவரை பதில் வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் அங்காராவில் உள்ள இலங்கை தூதரகம் என்பன, அண்மையில் உக்ரைன் அதிகாரிகளிடம் முறைப்படி போர் முனையில் இருக்கும் இலங்கையர்கள் பற்றிய விபரங்களை வழங்குமாறு கோரியிருந்தன. 

அத்துடன், கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் நினைவூட்டல் ஒன்றும் அனுப்பப்பட்டது, ஆனால் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கிடையில், ரஷ்ய போர் முனையில் உள்ள தனது நாட்டினரை விடுவிப்பதில் இலங்கையின் முயற்சிகள் இப்போது தோல்வியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்தகைய ஆட்சேர்ப்புகள் அதன் சட்டத்திற்கு இணங்க மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரஷ்யா வலியுறுத்துகிறது.

இதன்படி, உக்ரைனுக்கு எதிரான போரில் தனது இராணுவத்தில் இணைந்து கொள்வதில் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இலங்கை நாட்டவர்கள் மதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை ரஷ்யா கடைப்பிடிக்கிறது. 

இந்தநிலையில், இருதரப்பு உறவுகளில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இரு நாடுகளும் இப்போது இந்த விவகாரத்தை இராஜதந்திர ரீதியாக தீர்க்க முயல்கின்றன.

இதுவரை, 400இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் ரஷ்யாவுக்காக போரிடச் சென்றுள்ளதுடன், உக்ரைனுக்கு குறைவான எண்ணிக்கையினரே சென்றுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *