மேலும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள மக்கள்! – எதிரணி சுட்டிக்காட்டு

நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் வழங்கும் தீர்வுகளினால் பொதுமக்கள் மேலும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான நளின் பண்டார ஜயமஹா தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து துறைகளும் சேவைகளும் சீர்குலைந்துள்ளது. எரிபொருள் மற்றும் மின்சாரம் அனைத்துத் துறைகளுக்கும் அத்தியாவசியமான சேவைகள், இவை இரண்டும் கிடைக்காதது பாதகமானது.

அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாட்டால் மருத்துவமனைகள், போக்குவரத்துத் துறை, சிறியளவில் இருந்து பெரிய அளவிலான வணிகங்கள் வரை பெரும் சுமைக்கு உள்ளாகி உள்ளன.

தற்போதைய நிர்வாகம் தற்காலிக தீர்வுகளை மாத்திரமே வழங்குவதால் நிலைமை மேலும் மோசமாகும்.

சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்து வருவதாக அரசாங்கம் கூறினாலும், நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் ரஷ்யா அல்லது உக்ரைனைச் சேர்ந்தவர்கள். தற்போதைய நிகழ்வுகளின் காரணமாக அதுவும் சீர்குலைந்துள்ளது.

எதிர்காலத்தில் கோழி மற்றும் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மையப்படுத்தப்பட்ட ஆட்சியின்மையினால் பொதுமக்கள் இந்த பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அல்ல, மக்களின் வாழ்க்கைக்கே அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

குடிமக்கள் பட்டினியால் வாடுகின்றனர். அவர்களால் வாழ்வாதாரத்தில் ஈடுபட முடியாமல் தவித்து வருகின்றனர். கோழிப்பண்ணையாளர்கள் தங்கள் பண்ணைகளை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நெடுஞ்சாலைத் திட்டங்கள், பாரிய அபிவிருத்தி மற்றும் ‘100,000 திட்டங்கள்’ கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒரே நோக்கம் ஊழலில் ஈடுபடுவதும் நிதி மோசடி செய்வது மாத்திரமே என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply