
கொழும்பு, பெப் 24: மருத்துவமனைகள், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், உயர்பாதுகாப்பு வலயங்கள், தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு மின்சார விநியோகம் தடைப்படாது என்று மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி 24ஆம் திகதி முதல் மார்ச் 15ஆம் திகதி வரை அமல்படுத்தப்படவுள்ள மின்வெட்டு அட்டவணை தொடர்பாகத் தீர்மானிக்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.
மின்சார சபையின் கையடக்க செயலி ஊடாக அந்த பகுதிகளில் ஏற்படும் மின்வெட்டு தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.





