திருகோணமலையில் வீதி வியாபார நடவடிக்கைகளை தடை செய்ய கோரி போராட்டம்!

 

திருகோணமலை மத்திய சந்தை கட்டடத் தொகுதி வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டமானது  திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி திருகோணமலை நகரசபை வரை ஊர்வலமாக சென்றது.

இந்நிலையில், தங்கள் வியாபாரத்தை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு  வீதி வியாபார நடவடிக்கைகளை தடை செய்ய கோரி கவனயீர்ப்பில் ஈடுபட்ட வியாபாரிகள் வலியுறுத்தினர்.

மேலும், திருகோணமலை நகர சபைக்கு மாத கட்டணம் செலுத்தி வருகிறோம். ஆனால் வீதியோர வியாபாரிகளை அனுமதித்து விற்பனை நடவடிக்கையை மேற்கொள்வதனால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் போது பதாகைகளை ஏந்தியும் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்த சந்தை வியாபாரிகள் திருகோணமலை நகர சபை செயலாளரிடம் மனு ஒன்றினையும் கையளித்தனர்.

இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *