தமிழ் பொது வேட்பாளர் என்கின்ற ஒரு குடையின் கீழ் வராத அனைவரும். சாக்கடை புழுக்கள் -அண்ணாமலை தெரிவிப்பு!

தமிழ் பொது வேட்பாளர் என்கின்ற ஒரு குடையின் கீழ் வராத  அனைவரும். சாக்கடை புழுக்கள் என வட மாகாண  கடலோடிகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் கா.அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

அவர் இன்றைய தினம் யாழ்ப்பாணம்  வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது

தமிழ் பொது வேட்பாளர் என்கின்ற ஒரு குடையின் கீழ் வராத அனைவரும் சாக்கடைப் புழுக்கள். அவர்கள் தூக்கி தூரத்தில் வீசப்பட வேண்டியவர்கள்.இதனை எமது மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும், இதனை நாங்கள் ஏற்கனவே செய்திருக்கவேண்டும். இதனை செய்யாமல் விட்டதனால்தான் இவர்கள் இன்று இவ்வாறு கதைக்க வேண்டியதற்க்கான காரணம்.

அண்மையில் சுமந்திரன் கதைத்த விடயம் நாங்கள் தான் கதைப்பம், இவைய தோற்கடிக்கப்பட்டு வேண்டும், வெல்வதற்க்காக ஓடுபவனுக்கு தான் வரும் தோற்கிற பயம்,  நாங்கள் தமிழ் மக்கள் ஓடுவோம் என்பதை காட்டுவதற்க்காக வந்திருக்கிறோம், 

ஓடியே காட்டுவோம், நாங்ள்  ஒரு குடையின்கீழ் ஒன்று சேரவேண்டும். ஒன்று சேராத அத்தனை கட்சிகளையும் நாங்கள் பார்த்துவைக்க வேண்டும்,  அத்தனை துருப்பிடித்த ஆணிகளையும் பிடிங்கி அறியவேண்டும்.  இந்த துருப்பிடித்த ஆணிகள் இவ்வளவு காலமும் செய்த வேலை என்ன என்பதை பார்த்து வைத்து அத்தனை துருப்பிடித்த ஆணிகளையும் அடியோடு பிடுங்கி எறியவேண்டும்.

துருப்பிடித்த ஆணிகளை வைத்திருக்க வைத்திருக்க எங்களுக்குத்தான் விஷம், இதனால் அனைத்து தமிழ் மக்களும் ஒரு குடையின் கீழ் நின்று எவருக்கும் அஞ்சாமல் இந்த பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதனை நான் கேட்டுக் கொள்கின்றேன். 

இப்போது கதைக்க தெரிந்தவர்கள் என்று மேடைகளில் இருக்கிறார்கள், இன்று பாருங்கள், நாங்கள் தமிழ் பொது வேட்பாளர் என்றவுடன் தென்னிலங்கை இருந்து எத்தனை பேர் ஓடி வருகிறார்கள்.

இன்றுவரை எதுக்கும் வராதவர்கள் ஏன் இப்போது ஓடி வருகிறார்கள். ஏனினில் பயம், இப்போது அவர்கள் எத்தனை பேரை வைத்து இந்த கண்களை மூட வைக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். இனி யாரும் கண்களை மூடக் கூடாது. இனி யாரும் அயரக் கூடாது.

இதனால் அனைவரும் அயராது உழைக்கும் வேண்டும். வேகம் கொண்டு நடக்கவேண்டும். நாங்கள் யார் என்பதை பொது மக்களாக அத்தனை அரசியல் வாதிகளுக்கும்  காட்ட வேண்டும்.

நாங்கள் தான் உங்களை தெரிவு செய்தநாங்கள் என்பதை தெரிவிக்க வேண்டும்.

சுமந்திரன் பொது அமைக்புக்கள் தொடர்பாக தெரிவித்த கருத்து தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்காத அனைத்து கட்சிகளுக்கும் நான் இதனை கண்டனமாகவே பதிவு செய்கிறேன்.

இவ்வாறு சுமந்திரனுக்கு கதைப்பதற்க்கு தகுதி இல்லை.  வேண்டும் ஏன்றால் அவர் நேரடி விவாதத்திற்க்கு வரட்டும்.

நான் படிக்காதவன்தான், நான்காம் வகுப்புத்தான் படித்தேன், வேண்டும் என்றால் நேருக்கு நேர் வாருங்கள். நான் அவர் என்ன செய்தீர்கள் என்பதை கேட்கிறேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *