முகமாலை பகுதியில் வீடு மீது தாக்குதல், பல இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் நாசம்…!

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்க்கு உட்பட்ட  முகமாலை பகுதியில். நேற்று இரவு 10 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் தனிமையில் வாழ்ந்து வந்த பெண்மணி ஒருவரது வீடு அடித்து நொருக்கப்பட்டு தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது.

பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்க்கு  உட்பட்ட முகமாலை பகுதியில் வீடு ஒன்று அடித்து நொறுக்கப்பட்ட சேதமாக்கப்பட்டுள்ளன. வீட்டின்  சில பகுதிகள் தீர்க்கிரை  ஆக்கப்பட்டுள்ளன. 

குறித்த வீட்டில் தாயும் மகளும் வாழ்ந்து வந்த நிலையில் மகள் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்பதற்காக சென்றிருந்த நிலையில்  தாயார் அருகில் உள்ள வீடு ஒன்றில்  இரவுவேளைகளில்  பாதுகாப்பு கருதி உறங்குவது வளமையாக இருந்த  நிலையிலேயே நேற்றைய தினம் குறித்த வீடு அடித்து நொருக்கப்பட்டு  வீட்டின் சில பகுதிகள் தீக்கிரையாக்கப்பட்டு பெறுமதியான சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன. தாக்குதலுக்கு உள்ளான வீட்டின் உரிமையாளர் ராதா அழகேஸ்வரி என்பவராவார்.

இதேவேளை நேற்று  தாக்குதலுக்கு உள்ளானவரது  மகனது வீடும் கடந்தவருடம் தாக்குதலுக்கு  உள்ளாக்கப்பட்டது. இந்நிகழ்விலேயே நேற்றைய தினம் தாயாரது வீடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை பளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *