ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடளாவிய ரீதியில் தனது கருத்து கணிப்பை ஆரம்பித்துள்ளதாக அரசாங்கத்தின் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா வேண்டாமா என்பதை கருத்து கணிப்பு முடிவுகளை கவனமாக ஆராய்ந்த பின்னரே ரணில் விக்ரமசிங்க தீர்மானிப்பார் என தெரியவருகிறது.
அந்த நடவடிக்கைகளுக்காக புலனாய்வு துறை அதிகாரிகள் குழுவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணிப்புகள் அனைத்தும் மாவட்ட அளவில் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் மக்களின் கருத்தை அறிய இந்த நாட்களில் பலமான மக்கள் கருத்துக் கணிப்புகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக ஒவ்வொரு அரசியல் கட்சிகளாலும் இவ்வாறான கருத்து கணிப்புகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.