வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் இளைஞர் குழு ஒன்று மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடுள்ளதாக பொலிசார் இன்று தெரிவித்தனர்.
வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் குழுாய் கிணறு அடிக்கும் தொழில் செய்து வருகின்றார்.
குறித்த இளைஞர் வவுனியா நகரில் இருந்து வீடு சென்ற போது அவரை வழிமறித்த குழு ஒன்று அவர் மீது போத்தல்கள் மற்றும் தடிகாளால் தாக்குதல் நடத்தியுள்ளது.
அத்துடன் குறித்த இளைஞனின் வீடட்டிற்குள் நுழைந்து இளைஞனின் தந்தை மீதும் தாதக்குதல் நடத்தியுள்ளது.
காயமடைந்த இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, குழாய் கிணறு அடித்தல் தொடர்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நபர் ஒருவர் தனக்கு மிரட்டல் விடுத்ததாக பாதிக்கப்பட்ட இளைஞன் தெரிவித்துள்ளதுடன், அதன் தொடர்ச்சியாக இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதா என்ற கோணத்திலும் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.