சாவகச்சேரிப் பகுதியில் உள்ள வீட்டில் மா மரம் ஒன்றின் இலையானது வழமைக்கு மாறாக 60 சென்ரி மீற்றர் நீளத்தில் மிகப்பிரமாண்டமாக வளர்ச்சியடைந்துள்ளது.
சாதாரணமாக மா இலையின் நீளம் சுமார் 34 சென்ரிமீற்றர் நீளமுடையதாகவே இருக்கின்ற நிலையில் இந்த மாமர இலையானது சுமார் 60 சென்ரிமீற்றர் நீளமும் 20 சென்ரிமீற்றர் அகலமும் உடையதாக காணப்படுகின்றது.
சாவகச்சேரி டச் வீதியில் உள்ள மானா என்பவரின் வீட்டு முற்றத்தில் உள்ள மாமர இலையே இவ்வாறு வழமைக்கு மாறாக பிரமாண்டமாக வளர்ச்சி அடைந்துள்ளது.
இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்வதை காணக்கூடியதாக உள்ளது.