வீடொன்றில் இருந்து தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றின் கதவினை உடைத்து உள்நுழைந்த மர்ம நபர்கள், வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
வீட்டில் இருந்தவர்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் வீட்டார் வீடு திரும்பிய போதே , வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.
குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் வீட்டார் முறைப்பாடு செய்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.