தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் ஆன்மீக பாத யாத்திரை இன்று காலை 9:00 மணியளவில் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியது.
சந்நிதி முருகன் ஆலயத்தில் விசேட பூசைகள் இடம் பெற்று, யாத்திரிகை செல்கின்ற 4 இளைஞர்களுக்கும் ஆசிகள் வழங்கப்பட்டு வேல் கையளிக்கப்பட்டு யாத்திரை ஆரம்பமானது.
தொடர்ந்து சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆசி வழங்கல் மற்றும் வாழ்த்து நிகழ்வுகள் இடம் பெற்றது.
அதனை தொடர்ந்து யாத்திரை ஆரம்பமானது.



