வீட்டு வாடகை செலுத்தாமல் அரசை ஏமாற்றும் 56 அரசியல்வாதிகள்..! வெளியான அறிக்கை

 

அமைச்சர்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அரச அதிகாரிகள் 56 பேர் தங்களுடைய தங்குமிடங்களுக்காக பல கோடி ரூபாவுக்கும் மேலான வாடகையை செலுத்த தவறியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இது தெரியவந்துள்ளது.

அவற்றில் கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து ஏறக்குறைய 14 லட்சம் ரூபாய்க்கான 19 நிலுவைகளும் உள்ளன.

கடந்தாண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை 35 வீடுகளில் இருந்து சுமார் 23 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

32 நிறுவனங்களிடமிருந்து கட்டட வாடகையாக 33 கோடிக்கு மேல் அமைச்சுக்கு செலுத்தப்படவில்லை என்று அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை ஜய வடனா கிராம வீடுகளில் வசித்த 18 அரச அதிகாரிகளிடம் இருந்து சுமார் ஒரு கோடி ரூபா வசூலிக்கப்படவில்லை.

இதேவேளை சுமார் 32 நிறுவனங்களிடமிருந்து கட்டட வாடகையாக 33 கோடிக்கு மேல் குறித்த அமைச்சுகளுக்கு செலுத்தப்படவில்லை என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *