வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளை வலியுறுத்தி, அவர்களையும் மனிதர்களாக எண்ண வேண்டும் என கோரிக்கை வைத்து நடைபவனி ஒன்று இன்று இடம்பெற்றது.
வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து நகர் வழியாக வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தை இந்த நடைபவனி சென்றடைந்து அங்கு நிறைவு பெற்றிருந்தது.
சுமார் 50 பேர் வரையில் இந்த நடைபவனியில் கலந்து கொண்டனர்.
யாழ் சங்கம் என்கின்ற இந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்காக பணியாற்றுகின்ற அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது.
இவ் ஊர்வலத்தில் திருநங்கைகள் அதிக அளவில் கலந்து கொண்டதோடு தமது உரிமைகளை அனைவருமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தாமும் உணர்வுகளை உடைய மனிதப் பிறப்புகளை என்ற கருத்துக்களையும் முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



