மூதூர் இருதய புர மக்கள் போராட்ட களத்துக்கு விஜயம் செய்த இம்ரான் எம்.பி!

மூதூர் இருதயபுரம் பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக போராடிவரும் மக்களை இன்று (26) திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக கலந்துரையாடினார். 

குறித்த கவனயீர்ப்பில் மூதூர் பொலிஸாரினால் நேற்று (25)கைதான 15 நபர்களும் எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மூதூர் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாவட்ட கிளை தலைவர் சண்முகம் குகதாசன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *