பலஸ்தீன மக்களுக்கான துவா பிரார்த்தனையும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி காலம் சென்ற ஷஹீத் இப்ராஹிம் ரயீஸி அவர்களுக்கான கத்தமுல் குர்ஆனும் நினைவுப் பேருரையும்
“பலஸ்தீன மக்களுக்கான துவா பிரார்த்தனையும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி காலம் சென்ற ஷஹீத் இப்ராஹிம் ரயீஸி அவர்களுக்கான கத்தமுல் குர்ஆனும் நினைவுப் பேருரையும்” என்ற தலைப்பின் கீழ் இன்று மாலை கிண்ணியா விஷன் மண்டபத்தில் நிகழ்வு இடம்பெற்றது.
கிண்ணியா மனித நேயத்துக்கான சமூக ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் அதன் தலைவர் முஹம்மது சகித் தலைமை வகித்தார்.
உலமாக்கள் பள்ளிவாசல் சம்மேலணங்களின் தலைவர், ஓய்வு பெற்ற ஊழியர்களின் சங்கத் தலைவர்கள் அதன் உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் ஊடகவியலாளர் சந்திப்பும் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் சட்டத்தரணி மர்சூம் மௌலான பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.
இன்று பலஸ்தீனத்தை பற்றி பல்வேறு நாடுகளிலும் பேசப்பட்டு வருகின்றது.
ஈரான் ஜனாதிபதி காலம் சென்ற இப்ராஹிம் ரைஸ் பற்றியும் அவர் இலங்கையுடன் கொண்ட தொடர்பு பற்றியும் தமிழ் சிங்கள முஸ்லிம் இந்து கிறிஸ்தவ மக்கள் அவருக்கு செய்கின்ற தன்சல் நிகழ்வுகளை பார்க்கின்ற போது. இன்னும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்பதை பறைசாற்றின் நிற்கின்றது.