ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சில்வோஸ்திறி அலன்டீன் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாரடைப்பு காரணமாக யாழ் நெடுந்தீவு பகுதியில் காலமாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.