2024 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டமானது நேற்றையதினம்(27) திருகோணமலை மாவட்ட செயலாளர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது, கணக்காய்வு அத்தியட்சகர் எஸ்.எச்.எம்.மர்சூக், பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எல்.மஃறூப், பிரதம கணக்காளர் ப.ஜெயபாஸ்கர், கணக்காளர் ஏ.எல்.பிரசாத் விஜேசிங்க,பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக கணக்காளர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வு கிளை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.