எதிர்வரும் ஆட்சி மாற்றத்தையடுத்து ஒட்டுமொத்த பெருந்தோட்டத்துறையும் பரிணமிக்கவேண்டும் எனவும் அதற்கான முன் தயாரிப்பு பணிகள் முன்னெடுக்கபட்டு வருவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெருந்தோட்ட நிலங்களில், வதிவிட காணி உரிமை, வாழ்வாதார காணி உரிமை உள்ளிட்ட உரிமைகளைப் பெற்றுத்தந்து அவர்களை இந்தநாட்டின் முழுமையான பிரஜைகளாக்கும் கொள்கையை தமிழ் முற்போக்குக் கூட்டணி முன்னெடுக்கின்றது.
அதற்கான, பலம் மற்றும் தூரப்பார்வை எம்மிடம் உள்ளது. அடுத்த ஆட்சி மாற்றத்துக்கு உள்ளே சென்று திட்டங்களை வகுப்பதைவிட, முன்கூட்டியே முன் தயாரிப்பு நடவடிக்கைகளில் தற்போது நாம் ஈடுபட்டுள்ளோம்.
இந்நிலையில் அடுத்த ஆட்சி மாற்றத்தினூடாக மலையக மக்களின் இன்னல்கள் தீர்க்கப்பட வழிவகுப்போம் எனவும் தெரிவித்தார்.