திருகோணமலையில் இஸ்ரேலிய பெண் மாயம் – தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் அறிவிப்பு

இலங்கைக்கு வருகை தந்த 25 வயதான இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் திருகோணமலையில் காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாட்டுக்கு அமைய திருகோணமலை உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 22ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த குறித்த இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணி திருகோணமலையிலுள்ள ஹோட்டலில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், அவர் 26ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதனையடுத்து, ஹோட்டலின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

காணாமல் போன சுற்றுலாப் பயணி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால், இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் உப்புவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணி தொடர்பில் தகவல் அறிந்தோர் +972508899698 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு அல்லது sar@magnus.co.il மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *