கொழும்பு – ஹோமாகம பிரதேசத்தில் 16 வயது சகோதரியை தகாத முறைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் மூத்த சகோதரன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்றுள்ளது.
ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹோமாகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ஹோமாகம தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.