பொது போக்குவரத்து சேவைகளை அத்தியாவசிய சேவையாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
1979 ஆம் ஆண்டு 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி செயலாளரினால் மேற்படி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, பயணிகள் அல்லது பொருட்கள் போக்குவரத்துக்காக வீதிகள், பாலங்கள் மற்றும் தொடருந்து வீதிகள், தொடருந்துகள் போன்றவற்றின் மூலம் போக்குவரத்துச் சேவைகளை இலகுபடுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் உரிய வர்த்தமானி அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ளது.