இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதுபெரும் தலைவரும், கடந்த அரை நூற்றாண்டாகத் திருகோணமலை மாவட்டத்தைப் பிரதிநித்துவப்படுத்தி நின்றவரும், இலங்கைத் தமிழர் இனச் சிக்கலுக்கு தீர்வுக்காக அயராது உழைத்து வந்தவருமான மாண்புமிகு இரா.சம்பந்தன் ஐயா இயற்கை எய்திய செய்தி அறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைகின்றோம்.
ஐயாவின் பிரிவால் வாடும் அவரது மனைவி, மக்கள், மருமகள்,பேரன் உள்ளிட்ட உற்றார், உறவினர் அனைவருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் சார்பில் இரங்கலையும் துயர் பகிர்வினையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என மாவட்ட கிளை தலைவர் சண்முகம் குகதாதன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.