கடந்த வாரம் அதிபர், ஆசிரியர்கள் மீது தொடுத்த மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்து நாடு தழுவிய ரீதியில் பாடசாலைகளுக்கு முன்பாக அதிபர், ஆசிரியர்கள் கறுப்புப் பட்டியணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டம் இன்று(02) பாடசாலை நிறைவடைந்த வேளையில் 2 மணிக்கு பின்னர் இலங்கையில் உள்ள சகல பாடசாலைகள் முன்பாகவும் இடம்பெற்றது.
இந்த போராட்டத்தை இணைந்த அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
இவ்வாறானதொரு நிலையில், ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயம் முன்பாக ஆசிரியர்களின் போராட்டம் இடம்பெற்றது.
இதில், சாதாரண வேண்டுதலுக்கு தீர்வு கொடு, ரணில் விக்கிரமசிங்கவின் ஒடுக்குமுறை அறிக்கைக்கு எதிராக போராடுவோம் என பல்வேறு சுலோகங்களை ஏந்தி அதிபர், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
இப்போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர் ஒருவர் கருத்து வெளியிடும்போது,
போராட்டத்திற்கான தீர்வு கிடைக்காத விடத்து தொடர்ந்தும் போராட்டத்தை முன் கொண்டு செல்லப் போவதாக கருத்து வெளியிட்டார்.