உறுமய வேலைத் திட்டத்தின் கீழ் பூரண உரித்து அளிப்பு வழங்குதல் தொடர்பிலான நடமாடும் சேவையொன்று இன்று தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.குறித்த நடமாடும் சேவையானதுதம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்றதுடன் “உறுமய” திட்டத்தின் கீழ் பூரண உரித்து அளிப்பு பத்திரங்களை இதன் மூலம் பெறக் கூடிய வாய்ப்பு கிடைக்கப் பெறுகிறது .
மீரா நகர், பொற்கேணி , முள்ளிப்பொத்தானை, சிராஜ் நகர், முள்ளிப்பொத்தானை வடக்கு,முள்ளிப்பொத்தானை கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்தவர்களுக்காக இன்றைய தினம் இடம் பெற்றது .
இதில் காணி ஆணையாளர் என்.வில்வரத்னம், காணிக் கிளை உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.