உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக் குழு- இந்திய அதிதிகள் குழு சந்திப்பு…!

இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற் பாட்டில் அதன் தலைவர் மெளலவி முபாரக் அப்துல் மஜீட் அவர்களின் நெறிப்படுத்தலில் இலங்கைக்கு வந்திருந்த இந்திய அதிதிகள் குழுவுடனான உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக் குழு சந்திப்பு நேற்று(03) சாய்ந்தமருதில் இடம்பெற்றது. 

இந்தியன் முஸ்லிம்லீக்கின் பிராந்தியப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டசபை உறுப்பினருமான கெளரவ கே. ஏ. எம். முஹம்மத் அபூபக்கர் (MLA), தமிழ்நாடு சிரேஸ்ட ஊடகவியலாளர் மணிச்சுடர் மற்றும் மக்கள் குரல் ஜனாப் எம். கே. சாஹுல் ஹமீது, இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்கின் உதவிப் பொதுச் செயலாளர் ஜனாப், எஸ். ஏ. முஹம்மத் மக்கி, தமிழ்நாடு திருநெல்வேலி “அலி சன்ஸ் “நிறுவன தலைவர், ஜனாப் எம். நெய்னார் முஹம்மத் கடாபி ஆகியோர் அடங்கிய குழுவை நேற்றைய தினம் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுக் குழுவினர் கல்முனையில் சந்தித்தனர். இச் சந்திப்பில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு தொடர்பாகவும் கலந்துரையாடினர்.

பரஸ்பர புரிதலுடனான இச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்மிடையிலான கலை, கலாச்சாரம் ,இலக்கியம் பற்றிப் பேசப்பட்டதுடன் மாநாட்டுக் குழுவினரை இந்தியாவிற்கு வருகை தருமாறும் அதிதிகளால் அழைப்பு விடுக்கப்பட்டது.

அதிதிகளின் அழைப்பை ஏற்று விரைவில் மாநாட்டு குழு இந்தியா  செல்லவிருப்பதாக மாநாட்டுக் குழுத் தலைவர்கலாநிதி ஏ. எல் அன்சார் தெரிவித்தார்.

சாய்ந்தமருது இக்ராகலையகத்தில், இடம்பெற்ற இச்சந்திப்பின் போது இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்திய அதிதிகளுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கெளரவம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *