இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த பெருந்தலைவர் இரா. சம்பந்தனுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நல்லூர் தொகுதிக் கிளை நேற்றையதினம்(05) அஞ்சலி செலுத்தியது.
இந்த நிகழ்வு நல்லூர் தொகுதி கிளையின் தலைவரும் வடக்கு மாகாண சபை அவைத் தலைவருமான சீ. வீ. கே. சிவஞானம் தலைமையில் நேற்றையதினம்(05) மாலை நடைபெற்றது.
நல்லூர் தொகுதி கிளை பணிமனையில் நடந்த இந்நிகழ்வில், நினைவுச் சுடரை நல்லூர் தொகுதி கிளையின் செயலாளர் இ. இராஜதேவன் ஏற்றி வைத்தார்.
இரா. சம்பந்தனின் திருவுருவ படத்துக்கு சீ. வீ. கே. சிவஞானம், இராஜதேவன் இணைந்து மலர் மாலை அணிவித்தனர்.
தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்றவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.
இந் நிகழ்வில் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.