சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பழைமை வாய்ந்த துணவி சிவன் ஆலயம் புனரமைப்புச் செய் யப்படவுள்ளது.
குறித்த சிவன் ஆலயமானது 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்பதுடன் தொல்லியல் திணைக்களத்தால் தொன்மை வாய்ந்த புராதன சின்னமாக அடையாளப்படுத் தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மருத்துவர் சிவயோகநாதனின் நிதிப்பங்களிப் பில் முதற்கட்டமாக 2.5 மில்லியின் ரூபா செலவில் ஆலயம் சீரமைக்கப்பட வுள்ளதாக யாழ். மாவட்ட தொல்லியல் திணைக்கள அதிகாரி கபிலன் தெரிவித் துள்ளார்.
அத்துடன் இதற்கான மேலதிக நடவடிக் கைகளுக்கான அனுமதி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தால் நேற்று வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.