தமிழரசுக் கட்சியின் நெடுந்தீவு கிளையின் ஏற்பாட்டில் கட்சி அலுவலகத்தில் காலை 10.00 மணியளவில் தமிழரசுக் கட்சியின் நெடுந்தீவு கிளை செயலாளர் வி.ருத்திரன் தலைமையில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் பொதுச்சடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் வணபோதகர் யூட் எழில் அமுதன் , முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பரமேஸ்வரி, கட்சியின் நெடுந்தீவு கிளை உபதலைவர் மைக்கல் யேசுதாஸன், கட்சியின் நெடுந்தீவு கிளை உபசெயலாளர் சுதன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.