யாழ்ப்பாணம், பெப்.25
யாழ் பெரியபுலம் மகா வித்தியாலயம் தனது 200 ஆண்டை கொண்டாடும் முகமாக பழைய மாணவர்களை ஒன்றிணைத்து பேரணி ஒன்றை வரும் 27.02.2022 ஞாயிற்றுக்கிழமை நடத்திவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
1823 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பாடசாலை ஆரம்பத்தில் அமெரிக்க மிஷனரியினால் நடாத்தப்பட்டது. யாழ் மத்திய கல்லூரியின் ஸ்தாபகராக ஜேம்ஸ் லிங் என்பவதே இந்த பாடசாலையையும் ஆரம்பித்துள்ளார்.
அந்த வகையில் இந்தப் பாடசாலை தற்போது தனது 200 ஆண்டில் காலடி எடுத்து வைக்கவுள்ளது. அதன் ஆரப்பமாக இந்த பேரணி அழைப்பை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் விடுத்துள்ளனர்.
எனவே, இந்த பேரணிக்கு பழையமாணவர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் பூரண ஆதரவை தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள்.






