மறைந்த விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிக்கிரியைகள் இன்று..!

நவ சம சமாஜ கட்சியின் மறைந்த தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிச் சடங்கு இன்று இடம்பெறவுள்ளது.

இறுதிக் கிரியை பொரளை – பொது மயானத்தில் இன்று பிற்பகல் 5 மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உடல் பொரளையிலுள்ள தனியார் மலர்சாலை ஒன்றில் நேற்று காலை முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

உடல் நலக் குறைவு காரணமாக நவ சம சமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன கடந்த புதன்கிழமை காலமானாu;.

இந்நிலையில் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *