யாழ். மரபுரிமைச் சின்னங்கள் அனைத்தும் புதுப்பொலிவு பெறும்! – மாநகர முதல்வர்

யாழ். மாநகர எல்லைக்குட்பட்ட மரபுரிமைச் சின்னங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு, புதுப் பொலிவு பெரும் என மாநகர சபையின் முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

நல்லூர் இராசதானியின் தோரணவாசல் புனருத்தாரணம் செய்வதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று மதியம் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண இராச்சியத்துக்கு சொந்தமான அனைத்து புராதான சின்னங்களையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அவை எமது சொத்துக்கள். இதற்காக மரபுரிமை பாதுகாப்பு, குழு ஒன்றை உருவாக்கி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.

அந்த வகையில் மந்திரி மனை, சங்கிலியன் பூங்கா, யமுனா ஏரி உள்ளிட்ட பல இடங்கள் பாதுகாக்கப்பட்டு சீரமைக்கப்படவுள்ளது. அவை பார்வைக்காகவும் விடப்படும். தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியுடன் இந்த நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றோம். இது அரசியல் விடயம் அல்ல. தமிழ் மக்கள் சார்ந்த விடயம். எம்முடன் இணைந்து செயற்பட அனைவரும் முன்வர வேண்டும்.- என்றார்.

Leave a Reply