கிளிநொச்சி திருவையாறு பாடசாலையின் பொன் விழாவை முன்னிட்டு நடைபவனி!

கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலயத்தின் பொன் விழாவை முன்னிட்டு பாடசாலை சமுகத்தால் ஆரோக்கியத்தை பேணுவோம் என்ற தொனிப்பொருளில் நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

நேற்றையதினம்(26)  காலை பாடசாலையிலிருந்து ஆரம்பமாகிய நடைபவனி திருவையாறு பகுதியை வலம் வந்து பாடசாலையில் நிறைவடைந்தது . 

குறித்த நடைபவனியில்  பாடசாலையின் முன்னைநாள் அதிபர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் ,மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply