
கொழும்பு, பெப் 25: டீசல் தட்டுப்பாடு காரணமாக மரக்கறிவிநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மரக்கறி வரத்து அதிகரித்துள்ள போதிலும் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கொள்வனவு செய்வதற்காக வர்த்தகர்களின் வருகை குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
வறண்ட காலநிலை காரணமாக பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கு டீசல் மோட்டார்கள் பயன்படுத்தப்படுவதாகவும், டீசல் விநியோகத்தில் கடும் நெருக்கடி நிலவுவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.





