தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகவுள்ள தாழமுக்கம்! வடக்கில் கனமழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 27ம் திகதி பிற்பகலுக்கு பின்னர் தாழமுக்கமொன்று உருவாக வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் 02.03.2022 புதன்கிழமை முதல் 05.03.2022 சனிக்கிழமை வரை வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்க வாய்ப்புள்ளது.

குறிப்பாக 3ம் திகதி வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரையான நாட்களில் வடக்கு மாகாணம் முழுவதும் கனமழை கிடைக்க வாய்ப்புள்ளது.

இது மாதிரிகளின்(Models) அடிப்படையிலேயே கணிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக இக்காலப்பகுதியில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஏற்படுவதில்லை. எனினும் மாதிரிகள் தாழமுக்கம் உருவாகும் சாத்தியத்தையே வெளிப்படுத்துகின்றன.

மேலும், தொடர்ச்சியாக நிலைமைகள் அவதானிக்கப்பட்டு பிந்திய நிலைமைகள் தொடர்ந்தும் இற்றைப்படுத்தப்படும்.

Leave a Reply