கம்பஹா, அத்தனகல்ல பகுதியில் நேற்று (02) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நிட்டம்புவையிலிருந்து ஊராபொல நோக்கிப் பயணித்த வேன் எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின்போது மோட்டார் சைக்கிள் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உந்துகொட, ருக்கஹவில பகுதியில் வசித்த 49 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, வேன் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்தனகல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.