எமது அரசாங்கத்தின் கீழ் திருட்டுக்கு இடமில்லை எனவும் அவ்வாறானவர்களை மன்னிக்க முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் இன்று (03) நடைபெற்ற ரணவிரு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
திருட்டு, மோசடி, பொய், நிதிப் பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றும் வேலைத்திட்டத்தின் முன்னோடிகளாக மாறுங்கள்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், திருடர்களைப் பிடிக்கவும், திருடர்களை விரட்டவும், திருடப்பட்ட பொருட்களை நாட்டுக்குத் திருப்பியனுப்பும் பாரிய மனிதாபிமானப் பணியின் ஒரு அங்கமாக மாறுவதற்கு அனைவரும் ஒன்றிணையுமாறு எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது அழைப்பு விடுத்தார்.