யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி றோ.க.த.க பாடசாலையில் மாணவர்களால் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டலின் கீழ் பொலித்தீன் பாவனைக்கு எதிரான கவனயீர்ப்பு பேரணி இன்று(08) காலை முன்னெடுக்கப்பட்டது.
பேரணியை தொடர்ந்து பாடசாலை பிரதான வீதியின் இரு மருங்கிலும் உள்ள பொலித்தீன் மற்றும் உக்காத கழிவு பொருட்கள் மாணவர்களால் அகற்றப்பட்டது.
குறித்த பேரணியில் வடமராட்சி கிழக்கு பிரதேச பொது சுகாதார பரிசோதகர் நிரூபனும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.