
கிழக்கு மாகாணத்தில் அப்பாவி மக்களின் 170 கோடி ரூபாவை மோசடி செய்து இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ள நிதி நிறுவனத்தின் பணிப்பாளரை நாட்டுக்கு கொண்டு வர முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் முன்வைத்துள்ள கேள்விகள் இன்று வரை இழுபறி நிலையில் உள்ளது. ஒன்று பதிலளியுங்கள், இல்லையேல் வாய்மூல விடைக்கான வினாக்கள் முறைமையை இரத்து செய்யுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.





