தென்னிலங்கையில் ஜனாதிபதி தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இன்றையதினம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது முழுமையான ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, கொழும்பு கங்காராம விஹாரையில் மத வழிபாடுகளை நிறைவு செய்த பின்னர் ராஜித சேனாரத்ன தமது நிலைப்பாட்டை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.